பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து - மாட்டு வண்டியில் சிலிண்டருடன் ஊர்வலம் :

மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனம், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை ஏற்றி வந்து பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர். படம்: எல்.பாலச்சந்தர்
மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனம், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை ஏற்றி வந்து பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர். படம்: எல்.பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனம், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை ஏற்றி வந்து பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மத்திய மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட இடத்துக்கு விலை உயர்வை உணர்த்தும் வகையில் இருசக்கர வாகனம், எரிவாயு சிலிண்டரை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மமக மத்திய மாவட்டத் தலைவர் ஷரிப் தலைமை வகித்தார்.

நகர் தலைவர் அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தார். திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் முருகபூபதி மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in