Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM

தஞ்சாவூர் பெரிய கோயிலில் - ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ல் தொடக்கம் :

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படும். 10-ம் தேதி மஞ்சள் அலங்காரம், 11-ம் தேதி குங்கும அலங்காரம், 12-ம் தேதி சந்தன அலங்காரம், 13-ம் தேதி தேங்காய் பூ அலங்காரம், 14-ம் தேதி மாதுளை அலங்காரம், 15-ம் தேதி நவதானிய அலங்காரம், 16-ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 17-ம் தேதி கனி அலங்காரம், 18-ம் தேதி காய்கனி அலங்காரம் செய்யப்படும். நிறைவு நாளான ஜூலை 19-ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, இரவு கோயிலுக்குள் புறப்பாடு நடைபெறும் என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x