கிணறு வெட்டும் கூலி ரூ.12 லட்சம் மோசடி : வைகுண்டத்தில் வேலை செய்த சேலம் தொழிலாளர்கள் புகார்

வைகுண்டத்தில் கிணறு வெட்டுவதற்காக அழைத்துவரப்பட்டு, கூலி கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட, சேலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 25 பேர், தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். (அடுத்த படம்) கரோனா நிவாரணம் கோரி மனு அளிக்க வந்த கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர். 		          படங்கள்: என்.ராஜேஷ்
வைகுண்டத்தில் கிணறு வெட்டுவதற்காக அழைத்துவரப்பட்டு, கூலி கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட, சேலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 25 பேர், தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். (அடுத்த படம்) கரோனா நிவாரணம் கோரி மனு அளிக்க வந்த கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர். படங்கள்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

வைகுண்டம் பகுதியில் கிணறு வெட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காமல் மிரட்டுவதாக சேலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்தசில வாரங்களாக பல்வேறு தரப்புமக்களும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.

இட ஒதுக்கீடு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது, 69 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆபத்தாக முடிந்துவிடும். இதனை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 115 சமுதாயத்தினரும் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் பிறகு அறிஞர்களின் ஆலோசனைப்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சட்டத்தின் படி 20 சதவீத ஒதுக்கீடு முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

பூஜாரிகள் பேரவை

சேலம் தொழிலாளர்கள்

வைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலம் பகுதியில் கிணறு தூர்வாறும் பணிக்காக 12 ஆண்கள், 13 பெண்கள் என 25 பேரை அழைத்து வந்தனர். எங்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தந்துள்ளனர். மீதமுள்ள பணம் ரூ.11.55 லட்சத்தை தராமல் மிரட்டி வருகின்றனர். எங்களுக்குரிய பணம் கிடைக்கவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் குழுவினர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in