

தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சோம.சங்கர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் 6 மாத இடைவெளியில் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் வணிகவியல் கல்வித் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேர்வு நடைபெறவில்லை. எனவே வணிகவியல் கல்வி பயிற்சி மையங்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கி மீண்டும் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.