நீர்வாழ் உயிரின வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் :

நீர்வாழ் உயிரின வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்போருக்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், மீன்வளர் ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மற்றும் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 31-ம் தேதி ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in