கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் - மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் :

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் -  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ்அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு நாளை (5-ம் தேதி) முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பள்ளியில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள வட்டார வள மையங்கள், வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். இச்சேர்க்கைக்கு மாணவர் களின் பெற்றோர்கள் குடியிருக்கும் 1 கிமீ சுற்றளவில் உள்ள பள்ளியில் எல்கேஜி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தனியார் சுயநிதி பள்ளிகளின் பிரதான நுழைவு வாயிலில் அறிவிப்பு வெளியிட வேண்டும், என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in