Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM

நாமக்கல்லில் மருத்துவமனை, சிறப்பு மையங்களில் - கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது :

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 287 படுக்கைகளில் 149 படுக்கைகள் காலியாக உள்ளன. இதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 262 படுக்கைகளில் 203 படுக்கைகள் காலியாக உள்ளன.

அரசு கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் உள்ள 1,176 படுக்கைகளில் 1,001 படுக்கைகள் காலியாக உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 778 படுக்கைகளில் 666 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய் தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடக் கூடாது. அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்க வசம் அணிய வேண்டும்.

காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்களின் ஆலோச னைகளின் படி மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x