

அரியலூரில் 51, கரூரில் 44, மயிலாடுதுறையில் 37, நாகப்பட்டினத்தில் 42, பெரம்பலூரில் 24, புதுக்கோட்டையில் 66, தஞ்சாவூரில் 232, திருவாரூரில் 55, திருச்சியில் 170 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் கரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 2, மயிலாடுதுறையில் 1, தஞ்சாவூரில் 26, திருவாரூரில் 3, திருச்சியில் 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 694 பரிசோதனை முடிவுகளில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.