தமிழக-ஆந்திரா எல்லையில் கனமழை - புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் பாலாற்றில் நீர்வரத்து : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மலர் தூவி வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் வேலூர்அடுத்த பூட்டுத்தாக்கு பகுதி பாலாற்றில் ஓடைபோல் ஓடிய மழைநீர். அடுத்த படம்: வேலூரில்  அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடைசிப் படம்: தமிழக-ஆந்திர எல்லையில் புல்லூர் தடுப்பணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறுவதை மலர் தூவி வரவேற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா. அருகில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

தமிழக-ஆந்திர எல்லை வனப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப் பணையை கடந்து தமிழக பகுதிக்குள் வரும் வெள்ள நீரை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மலர் தூவி வரவேற்றார்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கன மழை பெய்து வருவதால் ஓடை, கானாறு, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட் டுள்ளது.

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறை காற்றுடன் பெய்த கன மழையால் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் இரவிலும் சீரமைப்புப் பணிகளை தொடங்கி நள்ளிரவில் மின் விநியோகத்தை உறுதி செய் தனர்.

மழையளவு விவரம்

நிரம்பிய புல்லூர் தடுப்பணை

அடுத்த ஒரு சில நாட்கள் மழை பெய்யும் என்பதாலும் வனப்பகுதியில் இருந்து பாலாற்றுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருக்கும் என்பதால் மேல் பாலற்றுப் பகுதிகளான அம்பலூர், ஆவாரங்குப்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பாலாற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

இந்நிலையில், புல்லூர் தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் கடந்து செல்லும் பகுதியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று பார்வையிட்டார். அவ ருடன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் தடுப்பணை பகுதியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட் டோர் மலர் தூவி வரவேற்றனர்.

தற்காலிக சந்தை பாதிப்பு

வேலூர், காட்பாடி, திருவலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற் றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in