Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

குடிமங்கலம் சுற்றுப் பகுதியில் தென்பட்ட சூரிய ஒளிவட்டம் :

உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று முற்பகலில் வானில் அரிய நிகழ்வாக சூரியனைச்சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றி மறைந்தது.

இதுகுறித்து கலிலியோஅறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறும்போது, ‘‘மெல்லிய மிக உயரமான சிரஸ் மேகங்கள் பெரும்பாலும் பனிப் படிகங்களால் ஆனவை. அந்த மேகங்களுக்குள் இடை நிறுத்தப்பட்ட பனித்துகள்கள் வழியாக சூரியஒளி செல்லும்போது ஒளிவிலகல், பிரதிபலிப்பு மற்றும் ஒளிச்சிதறல் ஏற்படுகிறது. அதனால் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் உருவாகிறது.இந்த அறுங்கோண வடிவ பனிப்படிகங்கள் வழியாக சூரிய ஒளிசெல்லும்போது, அது 22 டிகிரி கோணத்தில் வளைந்து சூரியனைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தை உருவாக்குகிறது. இதன் முழு வட்ட பரிமாணம்44 டிகிரி அளவில் இருந்தாலும், அவ்வட்டத்தின் ஆர அளவைக் கொண்டு உலகம் முழுவதும் இது 22 டிகிரி ஒளி வட்டம் என அழைக்கப்படுகிறது. இதை ‘சன்ஹேலோ’ என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். பொதுவாக காற்றில் மிகுந்த ஈரப்பதம் இருக்கும்போது, இதுபோல சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுவது வழக்கமான நிகழ்வுதான்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x