விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மேலஅழகியநல்லூரைச் சேர்ந்தவர் சொக்கையன் (72). காரியாபட்டியில் உள்ள அரசு வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவரை பின்தொடர்ந்து வந்த இருவர், ரூ.3 லட்சம் இருந்த பணப் பையை பறித்து தப்பினர்..காரியாபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.