

தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
இங்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் கடன்பெற்று, பல்வேறு பொருட்களை தயார் செய்து வரும் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை, அவர் பார்வையிட்டார். பாக்கு மட்டை, குளிர்பானம், தென்னை நார் மிதியடி, வாசனைதிரவியங்கள், முந்திரி பருப்புஉள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சிறந்த தொழில் மையம் மற்றும் தரமான நிர்வாக கட்டமைப்புக்கான ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கு கிடைத்துள்ளது. இதனை, மாவட்ட தொழில் மையபொது மேலாளர் ஸ்வர்ணலதாவிடம், ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், நேர்முக உதவியாளர் (நிலம்) கிறிஸ்டோபர் ஜெயபாலன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) சரஸ்வதி, வட்டாட்சியர் ஜஸ்டின், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமசந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.