புதிதாக 263 பேருக்கு கரோனா :

புதிதாக 263 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 263 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 46,965-ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தற்போது 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு இதுவரை 1,047 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 285 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49,524-ஆக உயர்ந் துள்ளது. 47,811 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in