Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 49 ஆயிரத்து 564 பேருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 729 பேர், 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 417 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில், கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 3 லட்சத்து 80 ஆயிரத்து 599, கோவேக்சின் செலுத்தியவர்கள் 68 ஆயிரத்து 965 பேர் ஆவர். ஆண்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 541 பேரும், பெண்கள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 954 பேரும் இதில் அடங்குவார்கள்.
இதேபோல முதல் டோஸ் செலுத்தியவர்கள் 3 லட்சத்து 89 ஆயிரத்து 155 பேர், 2-வது டோஸ் செலுத்தியவர்கள் 60 ஆயிரத்து 409 பேர்.தேவையான அளவு தடுப்பூசி வந்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் சேர்த்து மொத்தமாக 4 லட்சத்து 49 ஆயிரத்து 564 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT