

ராம்ராஜ் காட்டன் உற்பத்தி நிறுவன வளாகத்தை கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு, மரக்கன்றினை நட்டு வைத்தார்.
ஈரோட்டில் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு துணி பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, அருகில் உள்ள ராம்ராஜ் காட்டன் உற்பத்தி நிறுவனத்தைப் பார்வையிட்டார். ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், அமைச்சரை வரவேற்று, நிறுவனத்தின் பல்வேறு துறைகளுக்கும் அழைத்துச் சென்று, நெசவு மற்றும் துணி உற்பத்தி குறித்த நுணுக்கங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து ராம்ராஜ் காட்டன் உற்பத்தி நிறுவன வளாகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி மரக்கன்றினை நட்டு வைத்தார். கைத்தறித்துறை செயலர் அபூர்வா, கைத்தறி துணிநூல் துறையின் ஆணையர் பீலா ராஜேஷ், எஸ்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.