Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
இன்றைய பாலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் மாதவிடாய் மாதாமாதம் வருவதில்லை அதிக போக்கு ஆகிய பிரச்சினைகள் வருகின்றன.
இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் தைராய்டு, ரத்தசோகை, கருப்பை நார் திசுக்கட்டி, நீர்க்கட்டி, எண்டோ மேட்ரியோசிஸ் ஆகும்.
இதில் பல பெண்கள் நீர்க்கட்டி பிரச்சினையால் அவதிபடுகின்றனர் குறிப்பாக 60 சதவிகித பெண்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 18 முதல் 45 வயது உள்ள இனப்பெருக்க பிரிவை சார்ந்த பெண்களிடையே பெண் சினைப்பை நோய்க்குறி கோளாறு ஏற்படுகிறது.
சினைப்பை நோய்க்குறி (நீர்க்கட்டி) என்பது சினைப் பையில் இருக்கும் முட்டைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் சினைப்பை சுற்றி நீர் கொப்புளங்கள் போல உருவாகும் நிலையைக் குறிக்கும். இதனை விளக்கமாக கூறுகையில் ஒவ்வொரு சினைப் பையில் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை மட்டுமே முழுவளர்ச்சி அடைந்து தன்னை உடைத்துக்கொண்டு வெளிவரும் போது தான் விந்து களோடு இணையும் மீதம் இருக்கும் இருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற மாதவிடாய் சுழற்சி ஆகும். ஆனால் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் (நீர்க்கட்டி) இதில் என்ன நடக்கும் என்றால் கரு முட்டைகள் ஒன்றுகூட முழு வளர்ச்சி அடைந்து உடைந்து வெளிவருவதில்லை. அந்த முட்டைகள் அழிவதும் இல்லை அவற்றைச் சுற்றி சேர்ந்து கொண்டு நீர் கொப்புளங்களாக டை முட்டைப் பையை சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் மிகையாக வளர்ந்து இருத்தல், எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், முகப்பரு என்னை வடியும் சருமம். இந்த நோயின் விளைவாக குழந்தையின்மை, இதய நோய், நீரிழிவு நோய், உயர் கொழுப்பு உடல்பருமன் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இந்த நோயில் இருந்து விடைபெற நாம் சரியான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம் சரியான வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நோயில் இருந்து விடுபட ஹோமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன.
பெண்கள் நல சிறப்பு மருத்துவர்
-J.அனுஜா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT