தூத்துக்குடி - பெங்களூரு இடையே : இன்று முதல் மீண்டும் விமான சேவை :

தூத்துக்குடி - பெங்களூரு இடையே  : இன்று முதல் மீண்டும் விமான சேவை :
Updated on
1 min read

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில்கரோனா பரவல் காரணமாக விமான சேவைகளில் பாதிப்புஏற்பட்டது. சமீபகாலமாக தூத்துக்குடி-சென்னை இடையே 2 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, இயங்கி வந்த பெங்களூரு விமானம் மற்றும் சென்னைக்கு 3 சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு இன்று (ஜூலை 1) முதல் மீண்டும் விமான சேவைதொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடிக்கு மதியம் 12 மணிக்குவந்து சேரும் விமானம், மீண்டும் தூத்துக்குடியில் இருந்து 12.20 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோன்று மேலும் சில விமான சேவைகளும் விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in