பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து  திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்   :

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் :

Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கரோனா தடுப்பு மருந்துகள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழக அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிவழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பல்லடம் கொசவம்பாளையம் சாலை பிரிவு, கலசப்பாக்கம், பணிக்கம்பட்டி ஆகிய இடங்களில் நேற்று ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.

ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.பரமசிவம் (மார்க்சிஸ்ட் கம்யூ.),சாகுல்ஹமீது (இ.கம்யூ.), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓ.ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.எ. பாஸ்கரன் எருமாட்டிலும், விசிக மாவட்டச் செயலாளர் சகாதேவன் கூடலூரிலும், சிபிஐ மாவட்டச் செயலாளர் போஜராஜ் உதகையிலும், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in