

காங்கயத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் உடைக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக பணிபுரிவதாக தாராபுரம் கோட்டாட்சியர் (பொ) ரெங்கராஜுக்கு புகார் சென்றுள்ளது.
இதையடுத்து, கோட்டாட்சியர் மற்றும் காங்கயம் வட்டாட்சியர் தலைமையில் விசாரிக்கப்பட்டதில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 8 வயது பெண் குழந்தை ஒன்று அங்கு இருப்பது தெரியவந்தது.
வருவாய்த் துறையினர் கூறும்போது, "புகாரின் பேரில், தனியார் தேங்காய் உடைக்கும் ஆலையில் விசாரித்தோம். அவர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை என்பது தெரியவந்தது. சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து, கோவை மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு அவர்களை வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் பொருட்களையும் அனுப்பிவைத்தோம்" என்றனர்.