Published : 30 Jun 2021 03:14 AM
Last Updated : 30 Jun 2021 03:14 AM
கடலூர் மாவட்டத்தில் 36 வருடங்கள் முன் அனுபவம் கொண்ட தலைவர் லயன் கே.ரவி தனது தலைமையில் சிறந்த கல்வி சேவையை வழங்குவதோடு, பல தொழில் வல்லுனர் களையும் சாதனையாளர்களையும் உருவாக்கி வருகிறார்.
கடலூர் வைரங்குப்பம் - பூண்டியாங்குப்பம் பகுதியில் கடலூர் அருகில் இயங்கி வரும் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி AICTE அங்கீகாரம் பெற்று 3 ஆண்டு டிப்ளமோ பயிற்சிகளை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்புதேர்ச்சி டிப்ளமோ முதல் வருடத்தில் சேரலாம் பன்னிரெண்டாம் வகுப்பில் அகடமிக், பியூர் சயின்ஸ் மற்றும் வாகேஷனல் குரூப் அல்லது ஐடிஐ முடித்த மாணவ மாணவிகள் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெறலாம் இங்குDME, DEEE, DECE கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மற்றும் சிவில் என்ஜினீயரிங் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தேவை இல்லை. மிகச்சிறந்த லேப் வசதி, நவீன விடுதி, சுகாதாரமான உணவகம், நூலக வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுடன் இயங்கி வருகிறது மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி. அனைத்து ஊர்களிலும் இருந்து கல்லூரி பேருந்து வசதியும் உள்ளது. நவீன உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள் உண்டு. மேலும் விளையாட்டு துறையில் மண்டல மற்றும் மாநில அளவில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
மகாலட்சுமி கல்வி நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக விளங்குகிறது மகாலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்ரிங் கல்லூரி. இக்கல்லூரி கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் இயங்கி வருகிறது. இக்கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்ற 3 வருட பிஎஸ்சி கேட்ரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிளஸ் 2 வகுப்பை முடித்த மாணவ மாணவிகள் பிஎஸ்சி பட்டப்படிப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் 3 வருட டிப்ளமோ பயிற்சியான DHMCT [DIPLOMA IN HOTEL MANAGEMENT AND CATERING TECNOLOGY]சேர்ந்து பயிற்சி பெறலாம். பத்தாம் வகுப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு ஒரு வருட கேட்ரிங் சான்றிதழ் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. கேட்ரிங் பயிற்சியில் கம்யூனிகேஷன் இங்கிலீஷ், பிரண்ட்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் வகுப்பும் நடத்தப்படுகிறது.
இக்கல்வி நிறுவனத்தில் காரியா கிச்சன் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு இந்த உணவு விடுதியில் கிச்சன் மற்றும் ரெஸ்டாரன்ட் சர்வீஸ் பிரிவுகளில் வார இறுதி நாட்களில் பயிற்சி வழங்கப்படுகிறது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.
கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் கடந்த 33 வருடங்களாக வெள்ளி விழா கண்ட நிறுவனமாக இயங்கி வருகிறது மகாலட்சுமி ஐடிஐ எனும் தொழிற்பயிற்சி நிலையம். இங்குபத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்விஆன மாணவ மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 2வருட ஒரு வருட NCUT மற்றும் SCVT தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.25 வருடத்திற்கும் மேலான அனுபவம் மிக்க ஆசிரியர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டு பல தொழில் வல்லுனர்களை உருவாக்கி வருகிறது மகாலட்சுமி ஐடிஐ நிறுவனம்.
இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டிங் டெக்னீசியன் ஆகிய தொழிற்பிரிவு களில் பயிற்சி வழங்கப்படுகிறது. இங்குபயிற்சி பெறும் அனைத்து மாணவர்க ளுக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி. மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி, மகாலட்சுமி கேட்ரிங் கல்லூரிமற்றும் மகாலட்சுமி ஐடிஐயில் பயிற் சியை முடிக்கும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உறுதி என மகாலட் சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் லயன் கே.ரவி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT