Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM

மண், ஜல்லி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல் :

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே காட்டாத்துறையில், கல்குளம் வட்டாட்சியர் பாண்டியம்மாள் தலைமையில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த 9 டெம்போக்களை தடுத்து சோதனை செய்தனர். அவற்றில், ஜல்லி, மண்,பாறைப்பொடி ஆகியவை கடத்தப்பட்டது கண்டு பிடிக்கப் பட்டது. 9 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கனிம வளங்களை எங்கிருந்து கடத்திச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x