Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
இந்தியா டுடே வெளியிட்ட, கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், கோவை நவஇந்தியாவில் உளள, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கோவை மாவட்டத்தில் முதலிடமும், தேசிய அளவில் வியத்தகு சாதனையையும் படைத்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று, தேசிய தர நிர்ணயக் குழுவின் ஏ பிளஸ் கிரேடு மற்றும் தன்னாட்சி அந்தஸ்துடன், இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 27 இளநிலைப் பட்டப்படிப்புகள், 9 முதுகலை பட்டப்படிப்புகள், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பாடப்பிரிவுகளில் பகுதி நேரம், முழு நேர ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்தியா டுடே நிறுவனம் 25-வது ஆண்டாக, இந்தியாவில் உள்ள கல்லூரிகளை சர்வே செய்து, பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில், கல்லூரிகளை தரவரிசைப்படுத்தியதில் அறிவியல், பி.சி.ஏ, விடுதி மேலாண்மைப் பாடப்பிரிவுகளில் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் அறிவியல் பாடப்பிரிவில் 51-வது ரேங்க், பி.சி.ஏ பாடப்பிரிவில் 24-வது ரேங்க், வணிகவியல் பிரிவில் 74-வது ரேங்க், மேலாண்மை பாடப்பிரிவில் 31-வது ரேங்க், பி.பி.ஏ பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 48-வது ரேங்க், கலைப் பாடப்பிரிவுகளில் 77-வது ரேங்க், சமூகப் பணியியல் பாடப்பிரிவில் 29-வது ரேங்க் பெற்று தேசிய அளவில் தனக்கான இடத்தை இக்கல்லூரி பதிவு செய்துள்ளது. இதையடுத்து இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி பாராட்டினார்.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT