இந்தியாவிலேயே நீலகிரியில் : 100 சதவீத பழங்குடியினருக்கு தடுப்பூசி  : மாவட்ட ஆட்சியர் தகவல் :

இந்தியாவிலேயே நீலகிரியில் : 100 சதவீத பழங்குடியினருக்கு தடுப்பூசி : மாவட்ட ஆட்சியர் தகவல் :

Published on

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 27,500 பழங்குடியின மக்களில் 18 வயது பூர்த்தியடைந்த 21,800 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 100 சதவீதம் பழங்குடியின மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக இந்தியாவிலேயே நீலகிரி உருவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொது மக்கள் அதிகளவில் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இனி வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in