போதையில் அநாகரிகமாக நடந்த அரசுப் பேருந்து நடத்துநர் :

போதையில் அநாகரிகமாக நடந்த அரசுப் பேருந்து நடத்துநர் :
Updated on
1 min read

விருத்தாசலத்தை அடுத்த கண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(36). இவர் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்தவர், நேற்று மீண்டும் சென்னை செல்வதற்காக வேப்பூர் - உளுந்தூர்பேட்டை செல்லும் அரசுப் பேருந்தில் சாதாரண உடையில் பயணித் துள்ளார்.

மது போதையில் இருந்த அவர், சக பயணிகளை தரக்குறைவாக பேசியதோடு, அநாகரிமாக நடந்து கொண்டதால், அரசுப் பேருந்து ஓட்டுநர் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் முன் பேருந்தை நிறுத்தினார். அப்போது அரை நிர்வாணத்துக்கு மாறிய அருண்குமார், மகளிர் காவல் நிலையம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மகளிர் போலீஸார், சட்டம்ஒழுங்கு பிரிவு காவல் நிலையத் திற்கு தகவல் அளித்ததனர். அவர்கள், போதையில் இருந்த அருண் குமாரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட அருண் குமார் மாநகர் போக்குவரத்துக் கழக நடத்துநர் என்பது தெரிய வந்ததும், கொடுத்தப் புகாரை அரசு ஓட்டுநர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in