Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM
தூத்துக்குடியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மேளதாளம் முழங்க வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரோனா ஊரடங்கில் பல்வேறுதளர்வுகளை அரசு அறிவித்து வருவதால் மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை கொடுத்து வருகின்றனர். நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பல்வேறு அமைப்பினர் மனு கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள்
தூத்துக்குடி தமிழன்டா இயக்கம் சார்பில் மாநிலச் செயலாளர் கதிர்வேல் தலைமையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மேளதாளம் முழங்கமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்தமனுவில், ‘நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு அந்தந்த பகுதிகளில் முகாம் நடத்த வேண்டும்.நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பயண அட்டை வழங்க வேண்டும். இலவசமாக இசைக் கருவிகள் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
தமிழ் வளர்ச்சி இயக்கம்
தூத்துக்குடி தமிழ் வளர்ச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் நாகராஜன் தலைமையில் அளித்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜனை இலவசமாக உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. மேலும், அவர்கள் மருத்துவமனைகளுக்கு தேவையான ரூ.2 கோடி உபகரணங்களையும் வழங்கியுள்ளனர்.இந்த நிலையில் எதிர்ப்பு இயக்கத்தினர் சிலர் பொதுமக்களைதிசை திருப்பி போராட்டங்களை உருவாக்கி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக கூடி ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கிய பொருட்களில், நிறுவனத்தின் பெயர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். பணியில் இருந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் விரட்டியுள்ளனர். இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதுதக்க நடவடிக்கை எடுத்து பொதுஅமைதியை நிலைநாட்ட வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த பால் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் அவர்கள் அளித்த மனுவில், ‘தமிழ் புலிகள் கட்சியின் தேனிமாவட்ட நிர்வாகி திருநாவுக்கரசை படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்து மக்கள் கட்சி
சுங்கச்சாவடி
தமிழக மீனவர் மக்கள் கட்சித் தலைவர் அ.கோல்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனு:‘தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகைகுளம் அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியில் அரசின் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களிடம் கட்ட ணம் வசூலிக்கின்றனர்.
சுங்கச் சாவடியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாலையும் முறையாக பராமரிக்கப்படவில்லை. எனவே, இப்புகார்களை சரி செய்து அனைத்து வசதிகளையும் செய்யும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT