

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே விவசாயி முருகேசன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவரது மரணத்துக்கு நீதிகிடைக்க வேண்டும் என கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகித்தார். அனைத்து ரத்ததானக் கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜசேகரன், 5-வது தூண் நிறுவனர் சங்கரலிங்கம், நாம் தமிழர் கட்சி மருதம் மாரியப்பன், புரட்சி பாரதம் கட்சி தாவீதுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.