பேருந்துகள் இயக்கம், ஜவுளி, நகைக்கடைகள் திறப்பு - இயல்பு நிலைக்கு திரும்பிய பொதுமக்களின் வாழ்க்கை : வேலூர் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூரில் நேற்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூரில் நேற்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கிய நிலை யில், நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைவாக இருக்கும் வகை இரண்டு மற்றும் மூன்றில் உள்ள மாவட்டங்களுக்கு இடை யில் அரசுப் பேருந்து சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதேபோல், ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் ஏ.சி.யை இயக்காமல் 50 சதவீதம் வாடிக்கையாளர் களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளால் வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 629 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. தொற்றுபரவல் அதிகமாக இருக்கும் வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங் களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடங்கியதால் அங்கு மாநகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினியை தெளித்து சுத்தம் செய்ததுடன் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை செய்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

அருங்காட்சியகம் திறப்பு

வேலூர் கோட்டை அருங்காட்சி யகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் நேற்று காலை 9 மணிக்கு மேற் கொள்ளப்பட்டது. அதன்பிறகுபொதுமக்கள் அனுமதிக்கப்பட் டனர். தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கோட்டை திறந்திருக்கும். வேலூர் கோட்டை பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in