அருகே தடுப்பூசி முகாம் :

அருகே தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம், ஜூனியர் இந்திய செஞ்சிலுவை சங்கம், ம.மு.கோவிலூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ம.மு.கோவிலூரில் உள்ள சி.எஸ்.எம்.ஏ., மேல்நிலை பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ராஜா இம்முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க துணைச் செயலாளர் சையது அபுதாகிர், ஊராட்சித் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர் அசோக், சுகாதார ஆய்வாளர் கமாலுதீன், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரக் குழுவினர் 491 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in