

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் 2,579 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது 1,223 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் தற்போது புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருவோருக்கு ஒதுக்கப்பட உள்ளன. இதற்கான பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
வீட்டின் கட்டுமானச் செலவுத்தொகையில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆதார், வங்கிக்கணக்கு புத்தக நகல், வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.