‘நெருக்கடி காலத்தில் ஏற்றுமதி தொழிலுக்கு தமிழக அரசு அளிக்கும் ஆதரவுக்கு நன்றி’ :

‘நெருக்கடி காலத்தில் ஏற்றுமதி தொழிலுக்கு தமிழக அரசு அளிக்கும் ஆதரவுக்கு நன்றி’ :
Updated on
1 min read

நெருக்கடியான காலகட்டத்தில் ஏற்றுமதி தொழிலுக்கு ஆதரவு அளித்த தமிழக அரசுக்கு நன்றி என்று, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஏற்றுமதி நிறுவனங்களையும், இடுபொருள் தயாரித்து வழங்கும் துணை நிறுவனங்களையும் திருப்பூர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் 100 சதவீதத் திறனுடன்இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், ஏற்றுமதி தொழில்துறையினர், தங்களது ஏற்றுமதி ஆர்டர்களை உரிய காலத்தில் முடிக்க உதவியாக இருக்கும்.

இது, நமது பையர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இதன்மூலமாக, மாநிலத்திலுள்ள அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களும், அதன்துணை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.

அதேசமயம், அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களிலும் மருத்துவம் மற்றும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, தமிழக அரசுக்கும், தொழிலாளர்களின் நலனுக்கும் துணை நிற்போம். தொற்று இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம். இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் ஏற்றுமதி தொழிலுக்கு அரசு அளிக்கும் ஆதரவுக்கு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பாகவும், அனைத்து ஏற்றுமதி நிறுவனங்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in