கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - கரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு :

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் -  கரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 57,449 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 288 பேர் உட்பட இதுவரை 55,412 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 748 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 26,612 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 42,208 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 204 பேர் உட்பட இதுவரை 41,294 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 2 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in