

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஆபரேட்டர்கள் வேறு நிறுவனத்துக்குச் செல்லும்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதோடு, செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு சந்தா நிலுவை வைத்துள்ள நிலையில், தனியார் நிறுவனத்துக்கு சென்றுள்ள ஆபரேட்டர்கள் உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வேண்டும். அத்துடன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி இணைப்பைப் பயன்படுத்தும் மக்களை, தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்த தூண்டும் ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.