திருப்பூர் மாவட்டத்தில் குறைந்துவரும் தொற்று : 96-ஆக குறைந்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் :

திருப்பூர் மாவட்டத்தில் குறைந்துவரும் தொற்று : 96-ஆக குறைந்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் :

Published on

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டிருந்தது. மாவட்டநிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக, கரோனா தொற்று குறைந்துள்ளது. தற்போது, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 129- ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலம், 96-ஆக குறைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. எனினும், 96 -ல், மாநகரில் 46 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருப்பது தொற்று முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பதையே காட்டுகிறது. ஊரடங்கு தளர்வுகளால் வெளியே நடமாடும் பொதுமக்கள் மற்றும் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள், கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். கரோனா வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத் தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in