கல்வராயன் மலையில் மரவள்ளிக் கிழங்கு விளைநிலத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீஸார்.
Regional02
கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு; ஒருவர் கைது :
கல்வராயன் மலை மூளக்காடு அருகே மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படும் விளைநிலத்தில் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக சங்கராபுரம் வட்ட காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது தலைமையிலான தனிப்படையினர் நேற்று மூளக்காடு கிராமத்தில் உள்ள கண்ணன் (50) விவசாய நிலத்தில் சோதனையிட்டனர். அப்போது, மர வள்ளிகிழங்கு செடிகளுக்கு இடையே 37 கஞ்சா செடி பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கண்ணனை கைது செய்தனர்.
