Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM

ஸ்காட் கல்லூரி தேர்வு ஜூன் 28-ல் தொடக்கம் :

நாகர்கோவில்

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி (தன்னாட்சி) இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில் மாணவர்களுக்கான ஏப்ரல் 2021 செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28-ம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் விடைத்தாள்களை www.scott.ac.in/online என்ற

இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகள் காலை 9.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கும் தொடங்கும். தேர்வு தொடங்கும் அரைமணி நேரத்துக்கு முன்பு கல்லூரி இணையதளத்தில் இருந்து வினாத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதியவுடன் மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பி.டி.எப். கோப்பாக www.scott.ac.in/online என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

மேலும், விடைத்தாள்களை எல்லா தேர்வுகளும் முடிந்த பின்னர் ஒரே கவரில் வைத்து, `தேர்வு ஆணையர், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில் 629 003, தமிழ்நாடு’ என்ற முகவரிக்கு பதிவு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.

இத்தகவலை ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜே.ஆர்.வி.எட்வர்ட், தேர்வு ஆணையர் ஜி.அல்லன் ஞானராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x