

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.நகரத் தலைவர் பூபதி, பொறுப்பாளர் அலெக்ஸ்பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.