

தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சண்முக ராஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கடந்த 1997-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி 10 ஆயிரம் சாலைப்பணியாளர்களை நியமித்தார். தொடர்ந்து 5 ஆண்டுகள் நிரந்தர அரசு பணி யாளர்களாக பணிபுரிந்து வந்த சாலைப் பணியாளர்கள், 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் பிறகு நடைபெற்ற வழக்குகள் அடிப்படையில் சாலைப்பணியாளர்களுக்கு 2006-ம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பரமத்திவேலூரில் சாலைப்பணியாளர்கள் நடத்திய மாநில மாநாட்டில் அப்போதைய தமிழக துணை முதல்வராக இருந்த தாங்கள் கலந்து கொண்டு, எங்களின் கோரிக்கை களுக்கு தீர்வு காண்பதாக உறுதி கூறினீர்கள். அதன் அடிப்படையில், சாலைப் பணியாளர்களின் பணிநீக்க காலமான 7.9.2002 முதல் 10.2.2006 வரையிலான 41 மாத காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.