மூதாட்டிக்கு உதவி கேட்டு சிறுமி ஆட்சியரிடம் மனு :

மூதாட்டிக்கு  உதவி கேட்டு சிறுமி ஆட்சியரிடம் மனு :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே அனிச்சம் பாளையத்தை சேர்ந்த சிந்துஜா (11) என்ற 6-ம் வகுப்பு மாணவி, அதே கிராமத்தில் வசித்து வரும் பண்டேரிபாய் (58) என்பவரை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வந்தார். அவர் ஆட்சியர் மோகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அவர் மனுவில் கூறியிருப்பது:

எங்கள் கிராமத்தில் வசிக்கும் பண்டேரிபாய் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. அவரது பெற்றோர் ஏற்கெனவே இறந்து விட்டனர்.உறவினர்களின் ஆதரவும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார். உணவு கிடைக்காமல் அவர்தவித்து வருகிறார். அவர் யாரிடமும் எதையும் வாங்குவதில்லை. அவரை பார்க்க மிகவும் மனவருத்தமாக உள்ளது. அவருடைய நிலைமையை அறிந்து அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அழைத்து வந்துள்ளேன். எனவே அவருக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in