யோகா சிறப்பு பயிற்சியில் சிறுவர்கள் ஆர்வம் :

நாங்குநேரி கோகுலம் அகாடமி சார்பில், உலக யோகா தினத்தை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி நடைபெற்றது.(அடுத்தபடம்) திருநெல்வேலியில் நடைபெற்ற சிறப்பு யோகா பயிற்சி. (கடைசிபடம்)  18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போடுவதற்கு கோவில்பட்டியில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய  7 வயது சிறுமி ரவீணா. படம்: மு.லெட்சுமி அருண்

Updated on
1 min read

திருநெல்வேலியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் விவேகா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமுக்கு சங்க தலைவர் நாதன் தலைமை வகித்தார். செயலாளர் அழகேசராஜா பயிற்சி அளித்தார். அறக்கட்டளை தலைவர் அமல்தாமஸ் முன்னிலை வகித்தார். 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதுபோல மாவட்டம் முழுவதும் 66 இடங்களில் யோகாசன சங்கம் சார்பில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது.

வள்ளியூர்

கோவில்பட்டி

மாவட்ட நேரு யுகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சாய்தேவ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைலஜா கணேசன் தலைமை வகித்தார். டிஎஸ்பி கலைக்கதிரவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிறுமி வி.ரவீணா 75 யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், விஜயன், ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

கன்னியாகுமரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in