‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடைபெறும் பகுதிகளில் - போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீஸார் கண்காணிப்பு :

‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடைபெறும் பகுதிகளில் -  போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீஸார் கண்காணிப்பு :
Updated on
1 min read

திருப்பூரில் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் மாநகராட்சி எல்லைக்குஉட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, குமரன் சாலை டவுன்ஹால் சந்திப்பில் புதிதாக மாநாட்டு அரங்கம், பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக நவீன முறையில் கட்டும் பணி, பல்வேறுகுடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

கரோனா ஊரடங்கால், வாகனப் போக்குவரத்து இல்லாததால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளால் வாகனப் போக்குவரத்துஅதிகரித்துள்ளது.

இதனால் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் நடைபெறும் நல்லூர்- முத்தனம்பாளையம் சாலை,ஆண்டிபாளையம்- இடுவம்பாளையம் சாலை, நொய்யல் வீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடைபெறும் பகுதிகளில்போக்குவரத்து நெரிசல் மற்றும்சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் வி.வனிதா உத்தரவிட்டுள்ளார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டபணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் காலை, மாலை உள்ளிட்ட முக்கிய நேரங்களில் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in