

போச்சம்பள்ளியில் அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் 2 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ராசி நகரைச் சேர்ந்தவர் மயில்வாகனன் (48). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன் தினம் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.