

திருத்துறைப்பூண்டி வட்டாட் சியர் ஜெகதீசனிடம் முத்துப் பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சியினர் நேற்று முன்தினம் அளித்த மனு:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம், பின்னத்தூர், தோலி, உப்பூர், ஆலங்காடு போன்ற ஊராட்சிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், உதயமார்த்தாண்டபுரத்தில் தேசிய மயமாகக்கப்பட்ட வங்கியின் கிளையை தொடங்க வேண்டும். இதன் மூலம் வணிகர்கள், சுயஉதவிக் குழுவினர், மாணவ, மாணவிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்.