முன்னாள் கல்லூரி மாணவர்கள் நிவாரணம் வழங்கல் :

முன்னாள் கல்லூரி மாணவர்கள் நிவாரணம் வழங்கல் :

Published on

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1994-1997-ல் படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில், கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு, திருப்பூரில் உள்ள சைல்டுலைன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 45 குழந்தைகளின் குடும்பங்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் மற்றும் சைல்டுலைன் அமைப்பு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in