Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

மதுரையில் எஸ்டிபிஐ போராட்டம் :

மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கை போராட்டம் கீழவெளிவீதி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி மாவட்ட தலைவர் லத்தீப், மகளிரணி மாவட்ட தலைவி கதிஜா பீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கோரிப்பாளையம் பகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x