

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல் லாணி பகுதியில் பனை ஓலை, தென்னை உற்பத்தியாளர் குழுக் களுடன் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கலந்துரையாடினார்.
திருப்புல்லாணி ஒன்றியம், தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஊராட்சிகளில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட கோவிட் நிதி உதவி தொகுப்பு (கேப் பண்ட்) மூலம் நிதி பெற்ற பனை ஓலை உற்பத்தியாளர் தொழில் குழு, தென்னை உற்பத்தியாளர் குழுவினருடன் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கலந்துரையாடினார். களிமண்குண்டு தென்னை உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.1.5 லட்சம் கோவிட் சிறப்பு நிதி வழங்கப்பட்டது. இக்குழு மூலம் சிறுதொழில் நிறுவனம் தொடங்கப்பட்டு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்யை சந்தைப்படுத்த ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தெய்வேந்திரன் உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.