Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

தங்கம் விலை பவுனுக்கு : ரூ.240 குறைவு :

சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், தொழில் மற்றும் உற்பத்தியில் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,440-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4,430-க்கு விற்பனை ஆனது.

இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,460-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x