தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு - முதல் மாத சம்பளத்தை வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ :

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமுவிடம் தனது முதல் மாத சம்பளத்துக்கான வரைவோலையை அளிக்கிறார் எம்எல்ஏ எம்.சின்னதுரை.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமுவிடம் தனது முதல் மாத சம்பளத்துக்கான வரைவோலையை அளிக்கிறார் எம்எல்ஏ எம்.சின்னதுரை.
Updated on
1 min read

தமிழக முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்காக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் கவிதா ராமுவிடம் தனது முதல் மாத சம்பளத்தை கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.சின்னதுரை நேற்று வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கட்சியின் ஆலோ சனைப்படி தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக எனது ஒரு மாத சம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை வரைவோலையாக ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன்.

மேலும், கந்தர்வக்கோட்டை தொகுதியில் அதிக எண்ணிக்கை யிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசின் ஒத்துழைப்போடு மேற்கொள்வேன் என்றார். அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in