

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் இரவு மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மட்டக்கடை செல்வராஜ் மகன் மரிய அந்தோணி சகிலன் (24), சகாயராஜ் மகன் சந்தனகுமார் (33), கென்னடி மகன் சிம்சன் (25), குருஸ்புரம் ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (24) ஆகியோர் பிடிபட்டனர்.
கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.