Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் - 459 அர்ச்சகர்களுக்கு கரோனா நிவாரண நிதி :

செங்கை, காஞ்சி மாவட்ட கோயில்களில் பணியாற்றும் 459 அர்ச்சகர்களுக்கு கரோனாநிவாரண நிதியை, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில் பயனாளிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் முன்னிலையில், ஊரக தொழில் துறை அமைச்சர்தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

செங்கை மாவட்டத்தில் 164 திருக்கோயில்களில் உள்ள 231 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூ.9 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் ரூ.4000, உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா,காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையஇணை ஆணையர் போ.ஜெயராமன், செங்கல்பட்டு உதவி ஆணையர் க.பெ.கவெனிதா, செங்கல்பட்டு கோட்டாட்சியர் சாகிதாபர்வின், செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம்,அருள்மிகுதெய்வ சேக்கிழார் மணிமண்டபத்தில் மாவட்டஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்திதலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அர்ச்சகர்கள், பூசாரிகள் 228 பயனாளிகளுக்கு ரூ.9.12 நிவாரண தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப் பெருந்தகை, சேக்கிழார்அறக்கட்டளை செயலாளர் செந்தாமரைக்கண்ணன், இந்து சமய அறநிலைய உதவி ஆணையர்கள் ஜெயா, தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x