

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் இன்று (ஜூன் 17) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.